Published on 07/10/2020 | Edited on 07/10/2020

2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க சார்பில் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, முதல்வர் வேட்பாளராக அ.தி.மு.க தலைமை இன்று அறிவித்திருக்கும் நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தவறுகள் மக்களுக்கு நன்றாகத் தெரியும் என தி.மு.கவின் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ் இளங்கோவன், எடப்பாடி பழனிசாமியுடைய தவறுகள் மக்களுக்கு மிக நன்றாகத் தெரிந்து இருக்கின்றன. இவருடைய தமிழர் விரோதப் போக்கு, தமிழ்மொழி விரோதப் போக்கு, மத்திய அரசை துணிச்சலாக எதிர்த்துப் பேசி மாநில உரிமைகளைப் பெறுவதற்கான கையாலாகாத தன்மை ஆகியவை மக்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. இவர் பெயரை அறிவிப்பதன் மூலம் மக்களுக்கு, இவர் முதலமைச்சராக தகுதியற்றவர் என்பது நன்றாகத் தெரியும் என்றார்.