ADVERTISEMENT

பிள்ளை பிடிப்பவர் என எண்ணி வடஇந்திய வாலிபர் அடித்துக் கொலை!

11:39 AM Apr 30, 2018 | Anonymous (not verified)

பிள்ளை பிடிப்பவர் என தவறாக நினைத்து வடமாநில இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொலைசெய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகிலுள்ளது பரசுராமம்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக வட இந்தியாவில் இருந்து வீடுகளில் திருட்டு வேலைகளில் ஈடுபடும் கும்பல் சுற்றித்திரிவதாகவும், அவர்கள் குழந்தைக் கடத்திலிலும் ஈடுபடுகிறார்கள் என்றும் ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியது. இந்த செய்தியை அடுத்து அந்த கிராமத்தில் பொதுமக்கள் சிலர் கண்காணிப்பு வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இந்நிலையில், நேற்று இரவு 30 வயதுமிக்க வட இந்திய வாலிபர் ஒருவர் பரசுராமம்பட்டியில் சுற்றித்திரிவதைக் கண்ட சிலர், அவரை விரட்டி கட்டை உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த வாலிபர் இரத்தவெள்ளத்தில் தவித்துள்ளார். தகவலறிந்து வந்த காவல்துறையினர் அந்த வாலிபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன், இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது மற்றும் மோசமான குற்றம். அவர்கள் காவல்துறையிடம் தகவலளித்து, அந்த இளைஞரை ஒப்படைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். முதற்கட்ட விசாரணையில் அந்த இளைஞர் ரயிலில் வந்து குடியாத்தத்தில் இறங்கி, வழிதெரியாமல் சுற்றித்திரிந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், அந்த இளைஞர் யார், எங்கிருந்து வந்தார் என்ற தகவல்கள் கிடைக்கவில்லை.


ஜார்க்கண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு முகமது நயீம் எனும் இளைஞர் இதே காரணத்தால் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதேபோல், கடந்த சில தினங்களுக்கு முன்னர் சதாசிவம் எனும் 19 வயது வாலிபரும் இதேபோன்ற காரணத்தால் கொல்லப்பட்டார். சட்டத்தின் முன் குற்றம் செய்தவர், சந்தேகத்திற்கு இடமானவரை ஒப்படைக்காமல், விபரீத நடவடிக்கைகளில் ஈடுபடுவது மிகவும் தவறானது என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT