



Published on 11/01/2022 | Edited on 11/01/2022
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே தமிழ்நாடு மருத்துவ சமுதாய பேரவை சார்பில் பல்வேறு அமைப்புகள் இணைந்து அரசு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திண்டுக்கல் மாவட்டம் குரும்பப்பட்டியில் 12 வயது சிறுமி கலைவாணி பாலியல் வன்கொடுமை செய்து மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்ட வழக்கில் சாட்சியங்களை அரசு நிரூபிக்காததால் குற்றம் சாட்டப்பட்டவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பின்படி விடுதலை பெற்றுள்ளார். அதனால் இறந்த சிறுமியின் குடும்பத்தாருக்கு நீதி கிடைக்க உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து குற்றம் சாட்டப்பட்டவருக்கு உரிய தண்டனை வாங்கி தர வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.