People involved in the robbery  Police are conducting a serious investigation!

Advertisment

திருச்சி மேலகல்கண்டார் கோட்டை பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவர், அதே பகுதியில் வாடகை கார் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார்.

வழக்கம்போல் நேற்று இரவு பணியை முடித்துவிட்டு தன்னுடைய வாகனத்தில் சுமார் 10 மணி அளவில் பொன்மலை சந்தை வழியாக வந்தபோது வண்டியை வழி மறித்த மர்ம நபர்கள், அவர் கையில் வைத்திருந்த பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றைக் கொடுக்குமாறு கேட்டுள்ளனர்.

செந்தில்குமார் அவற்றைத் தர மறுத்ததால், மர்ம நபர்கள்கையில் வைத்திருந்த இரும்புக் கம்பியால் செந்தில்குமாரின் தலையிலும் முகத்திலும் தாக்கிவிட்டு, அவர் வைத்திருந்த செல்போன் மற்றும் பணத்தைப் பறித்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பாக, செந்தில்குமார் பொன்மலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து செந்தில்குமாரைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.