Advertisment

மக்கள் செல்வாக்கு பெற்ற தோழரை ஓரம் கட்டும் தோழர்கள்!

திராவிட கட்சிகளில் கோஷ்டி பூசல் இருப்பது போல் தோழர்கள் கட்சியிலும் கோஷ்டி பூசல் தலைவிரித்து ஆடி வருகிறது.

Advertisment

திண்டுக்கல் முன்னாள் எம்எல்ஏ வும்.ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில துணைத் செயலாளரரும், மாநில குழு உறுப்பினராகவும் இருந்து வருபவர் தோழர் பாலபாரதி

Advertisment

தோழர் பாலபாரதி தான் திண்டுக்கல் சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து மூன்றுமுறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர். அந்த அளவுக்கு பொதுமக்களின் குறைகளுக்கும். கோரிக்கைகளும் நிறைவேற்றி கொடுத்து இருக்கிறார். அதோடு அந்த மக்களுக்காக தானே போராட்டத்தில் குதித்து அவர்களுடை பல அடிப்படை வசதிகளை தீர்த்து வைத்தும் தொகுதியில் பல அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும் இருக்கிறார். அதன் மூலம் மக்கள் மத்தியில் கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரக்கூடிய தோழர் பாலபாரதி என்ற இமேஜ்சும் மக்கள் மனதில் எழுந்துள்ளதின் மூலம் மக்களின் செல்வாக்கு பெற்ற தோழராக பாலபாரதி இருந்து வருகிறார்.

balabarathi

ஒரு முறை கவுன்சிலராக வருபவர்கள் கூட ஐந்து வருடபதவி காலத்தில் கார்,வீடு, தோட்டம் தொரவு என வாங்கி போட்டு லட்சாதிபதிகளாக வந்து வந்து விடுகிறார்கள் அதுபோல் 15 வருடமாக எம்.எல்.ஏ. இருந்த தோழரும் சம்பாதித்து இருக்கிறார். ஆனால் பணம் காசை இல்லை கட்சிக்கு விசுவாசமாகவும் தன்னை வெற்றி பெறவைத்த மக்களுக்காக போராடி அந்த லட்சக்கணக்கான மக்களின் மனதில் இடம் பிடித்து இருக்கிறார் இந்த மக்களுக்களின் நலனுக்காக மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிடமே போராடி பல திட்டங்களையும் சலுகைகளையும் வாங்கி கொடுத்து மற்ற அரசியல்வாதிகள் போல் இல்லாமல் கரைபடியாத கைக்கு சொந்தகாரராகவும்,எழ்மையும், பணிவும்மாகவும் இருந்து வருபவர் கட்சி ஆபீசிலையோ வீட்டிலையோ டயினிங் டேபிலில் கூட உட்கார்ந்து சாப்பிடமாட்டார் கீழே உட்கார்ந்து தான் சாப்பிடுவார் அந்த அளவுக்கு ஆடம்பரத்தை விரும்ப மாட்டார்.

balabarathi

அந்த அளவிற்க்குகட்சிக்கு விசுவாசமாகவும். மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கவும் தான் தொடர்ந்து முறையும் சீட் கொடுத்ததின் மூலம் வெற்றி பெற்றார். கடந்த சட்டமன்ற மன்ற தேர்தலில் தலைமையே மாவட்ட செயலாளராக இருந்த பாண்டிக்கு சீட் கொடுத்ததின் பேரில் தோழர் பாலபாரதியும் பாண்டிக்காக தேர்தல் களத்தில் இறங்கி மக்களை சந்தித்து ஆதரவு திரட்டினார். ஆனால் ஆளும்கட்டி.எதிர் கட்சி பணபலத்தால் பாண்டி தோல்வியை தழுவினார். அதை தொடர்ந்தும் கூட வழக்கம் போல் தோழர் பாலபாரதி கட்சி கூட்டம் போராட்டங்களில் கலந்து கொண்டு வந்தார் கடந்த ஆறுமாதங்களுக்கு முன்பு மாவட்ட நாடு கூட்டத்தில் கலந்து கொண்டார் அதன் பின் லோக்கலில் கடைசி கூட்டம்.,போராட்டங்களுக்கு தோழர் பாலபாரதியை கூப்பிடாமலையே தோழர்கள் ஓரம் கட்டி வருகிறார்கள். ஆனால் தலைமையில் எப்பொழுதும் போல் தோழருக்கு மரியாதை இருக்கிறது என்ற பேச்சு தோழர்கள் மத்தியிலையே பரவலாக பேசப்பட்டு வருவதை கண்டு நாமும் சில தோழர்களிடம் கேட்ட போது..தோழர் எப்பவும் பணம், பதவிக்கு ஆசைபடமாட்டார்.

balabarathi

மக்கள் மனதில் தான் நல்ல பெயர் எடுத்து இருக்கிறார் அது மாநில குழுவுக்கே தெரியும் அதுனால வரக்கூடிய தேர்தலில் மீண்டும் தோழருக்கு சீட் கொடுத்து விடுமோ என்ற பயமும் தோழருக்கு மாவட்ட செயலாளர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட சதவீதம் அடிப்படையில் கிடைத்து விடுமோ? என்ற எண்ணத்தில் தான் மாநில குழு உறுப்பினரானர்கள் சிலர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் சிலர்தோழர் பாலபாரதியை இப்போதிருந்தே ஓரம் கட்ட வேண்டும் என்ற நோக்கத்தில் கட்சி கூட்டம், போராட்களுக்கு எந்த ஒரு தகவலும் சொல்வதில்லை பெயரும் போடுவதில்லை தற்பொழுது டீசல், பெட்ரோலியம் விலை உயர்வு போராட்டத்தில் மட்டும் தோழர் பாலபாரதி கலந்து கொண்டு விட்டு போனார். மற்றபடி மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் மற்றும் மாநில அளவிலான ஜனநாயக வாலிபர் சங்கத்தின் நகர மாநாடு திண்டுக்கல்லில் நடக்க இருக்கிறது அதில் தோழர் பாலபாரதி பெயரை போடாமல் புறக்கணித்து விட்டனர்.ஆனால் மூன்று முறை மக்கள் செல்வாக்கு மூலம் வெற்றி பெற்றும் தலைமையில் நல்ல பெயர் எடுத்து வந்தும் கூட லோக்கலில் பதியில் உள்ள சில தோழர்களால் தோழர் பாலபாரதி புறக்கணிக்கப்பட்டு வருவது தான் வருத்தமாக இருக்கிறது என்று கூறினார்கள். ஆக அனைத்து அரசியில் கட்சிகள் போலவே செங்கொடியிலும் உள்கட்சி கட்சி கோஷ்டி பூசல் இருந்து தான் வருகிறது

leaders balabarathi
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe