ADVERTISEMENT

நிம்மதி பெருமூச்சு விட்ட மக்கள்; தக்காளியின் விலை குறைந்தது

11:02 AM Sep 09, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

தக்காளி விளையக்கூடிய மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ததால் விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தக்காளி விலை அதிகரித்ததால் பொதுமக்கள் அவதியுற்ற நிலையில் பசுமைப் பண்ணைகளில் தக்காளி வாங்க மக்களை அரசு அறிவுறுத்தியது.

இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்தி அறிக்கையில், "தக்காளி விலையேற்றத்தால் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கூட்டுறவு நிறுவனங்களால் நடத்தப்படும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு தக்காளி விற்பனை செய்யும்பொருட்டு விவசாயிகளிடமிருந்து நேரடியாக தக்காளி கொள்முதல் செய்யப்பட்டு, பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலம் குறைவான விலைக்கு விற்பனை செய்ய தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தக்காளி தற்போது ரூ.40 முதல் 42 வரை விற்பனை செய்யப்படுகிறது. பொது மக்கள் இதை வாங்கிப் பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறோம்" என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகத்திற்கு தக்காளி அதிக அளவு ஏற்றுமதி செய்யும் மாநிலங்களில் கர்நாடக முதலிடத்தில் இருந்தது. அங்கு பெய்த கனமழையின் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டதால் தமிழகத்தில் தக்காளி வரத்து குறைந்து விலை அதிகரித்தது. மேலும் சில மாநிலங்களில் மழையின் பாதிப்பு சற்று குறைந்ததால் தற்போது தக்காளியின் வரத்து சந்தைகளில் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் சந்தைகளில் 40 முதல் 45 ரூபாய்க்கு விற்கப்படும் தக்காளி இன்று 10 முதல் 12 ரூபாய் வரை குறைந்து காணப்படுகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT