மக்கள் குறை தீர்க்கும் முகாம்... அமைச்சர்கள் பங்கேற்பு!

People grievance redressal camp; Ministers Participate

இன்று (20.12.2021) நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் பல்வேறு இடங்களில் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் கலந்துகொண்டனர்.

இந்நிலையில், இலால்குடி வட்டத்தில், இலால்குடி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காலை 10 மணியளவிலும், மண்ணச்சநல்லூர் வட்டத்தில், சமயபுரம் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரியில் காலை 11 மணியளவிலும், ஸ்ரீரங்கம் வட்டத்தில், திருச்சிராப்பள்ளி திண்டுக்கல் சாலை, தாயனூர் கேர் (CARE) கல்லூரியில் மதியம் 1 மணியளவிலும், திருச்சிராப்பள்ளி மேற்கு வட்டத்தில், திருச்சிராப்பள்ளி கன்டோன்மென்ட், செயிண்ட ஜான் வெஸ்ட்ரி ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப்பள்ளியில் பிற்பகல் 3 மணியளவிலும் நடைபெற உள்ள சிறப்பு மக்கள் குறை தீர்க்கும் முகாமில், பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.

எனவே பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கேற்று தங்களுடைய கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை அமைச்சர் பெருமக்களிடம் வழங்கி உரிய தீர்வு காணலாம்.

trichy
இதையும் படியுங்கள்
Subscribe