Skip to main content

திருப்பூர் ரயில் நிலையத்தில் குவிந்த வடமாநிலத்தவர்! 

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

People gathered at Tirupur railway station!

 

தீபாவளி பண்டிகை இந்தியா முழுக்க கொண்டாடப்பட்டாலும், இந்தியாவின் வட மாவட்டங்களிலேயே வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். தமிழ்நாட்டில் நாளை (12ம் தேதி) தீபாவளி பண்டிகை கொண்டாடவுள்ள நிலையில், வட மாவட்டங்களில் நாளை மறுநாள் (13ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதற்காக இந்தியாவின் ஏனைய மாநிலங்களில் இருந்து வேலை காரணமாக தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள் இன்று மாலை அவரவர் சொந்த ஊர்களுக்கு திரும்பிச் சென்று கொண்டிருக்கின்றனர். 

 

தொழில் நகரமான திருப்பூரில் அதிகளவிலான வட மாநிலத்தவர் பணி செய்துவரும் நிலையில், தீபாவளி பண்டிகையின் காரணமாக அவர்கள் எல்லாம் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பிச் செல்கின்றனர். இதன் காரணமாக இன்று திருப்பூர் ரயில் நிலையத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான வட மாநிலத்தவர் குவிந்தனர். 

 

குறிப்பாக கேரளா மாநிலம், ஆலப்புழாவில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம், தன்பாத் செல்லும் ரயிலுக்காக ஆயிரம் கணக்கானோர் குவிந்ததால், திருப்பூர் ரயில் நிலையமே ஸ்தம்பிக்கும் அளவுக்கு மக்கள் கூட்டம் இருந்தது. ஒரே நேரத்தில் 1000க்கும் மேற்பட்டோர் குவிந்ததால் அங்கு போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதேபோல், கோவை ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஆன்லைனில் கடன் தருவதாகக் கூறி மோசடி; 6 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்!

Published on 31/05/2024 | Edited on 31/05/2024
Online loan Tragedy happened to a 6-year-old girl

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள ஆறாக்குளம் என்ற கிராமத்தில் ராஜு என்பவர் வசித்து வந்துள்ளார். நூல் மில் ஒன்றில் பணியாற்றி வரும் இவருக்கு விஜி என்ற மனைவியும் 6 வயதில் மகள் ஒருவரும் இருந்துள்ளனர். இத்தகைய சூழலில்தான் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சமூக வலைத்தளத்தில் ஆன்லைன் செயலி மூலம் கடன் கொடுக்கப்படும் என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். இதனை நம்பி ராஜு அந்தக் கடன் கொடுப்பதாகக் கூறப்பட்ட நபர்களைத் தொடர்பு கொண்டுள்ளார்.

அப்போது இரண்டு லட்ச ரூபாய் கடன் வேண்டும் என்று ராஜூ கூறியுள்ளார். அதற்கு எதிர் முனையில் இருந்தவர்கள் இணையத்தில் சேவை கட்டணமாக 40 ஆயிரம் ரூபாய் செலுத்த கூறியிருக்கிறார்கள். அதனை நம்பி ராஜீவும் 40 ஆயிரம் ரூபாயை தன் நண்பர்களிடன் கடனாக பெற்று செலுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு கடன் தருவதாக உறுதி அளித்தபடி 2 லட்சம் ரூபாய் ஆன்லைன் செயலியில் கூறியவர்கள் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

Online loan Tragedy happened to a 6-year-old girl

இதனையடுத்து நேற்று (30.05.2024) இரவு ராஜீவ் தனது குடும்பத்தினருடன் பல்லடம் பேருந்து நிலையத்தில் இருந்துள்ளார். அப்போது அவரது 6 வயது குழந்தை வாந்தி எடுத்துள்ளது. அதே சமயத்தில் அவரின் பெற்றோருக்கும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனைக் கவனித்த அக்கம்பக்கத்தினர் 3 பேரையும் பல்லடம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுசென்றனர். அப்போது மூவரும் எலி மருந்தை உண்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் மூவரும், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டனர்.

இந்நிலையில் இன்று (31.05.2024) காலை 6 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதே சமயம் ராஜு மற்றும் அவரது மனைவி விஜி அகிய இருவருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஆன்லைனில் கடன் தருவதாகக்கூறி ஏமாற்றியதால் குடும்பத்துடன் தற்கொலை முயற்சி செய்ததது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவத்தில் 6 வயது சிறுமி உயிரிழந்தது திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Online loan Tragedy happened to a 6-year-old girl

மேலும் போலீசாரின் தொடர் விசாரணையில் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்ட நபர் கடன் தராததால் ராஜீவ் மன உளைச்சல் ஆகியுள்ளார். அதே சமயம் கடன் வாங்க முன்பணமாக கடன் கொடுத்த நண்பர்களும் ரூ.40 ஆயிரத்தைக் கேட்டதால் வேறு வழியின்றி குடும்பத்தோடு ராஜீவ் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது. 

Next Story

நொடிபொழுதில் நேர்ந்த துயரம்; வடமாநிலத்தைச் சேர்ந்தவர் பரிதாபமாக பலி!

Published on 14/05/2024 | Edited on 14/05/2024
Northindian State passed away due to electric shock

திருவள்ளூர் மாவட்டம் மப்பேடு அடுத்த  வளர்புரம் கிராமத்தில் இயங்கி வரும் சானோ இந்தியா பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அச்சம்ரோங்மெய் என்பவர் வேலை செய்து வருகிறார். இவர் மப்பேடு மேட்டுச்சேரி கிராமத்தில் சரவணன் என்பவர் வீட்டில்  தங்கியிருந்த வடமாநில இளைஞர்களுடன் தங்குவதற்காக சென்றுள்ளார்.

அப்போது அங்கு உள்ள வீட்டின் மொட்டை மாடியில் செல்போன் பேசிக்கொண்டே சென்றுள்ளார். மாடியின் அருகே சென்ற மின் ஒயரை கவனிக்காமல் அருகே சென்றதால் அச்சம்ரோங்மெய் கழுத்தில் மின் ஒயர் பட்டதால்  சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குவிரைந்து வந்தமப்பேடு போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு  வருகின்றனர்.