தமிழகத்தில் இரண்டாம் கரோனா அலை காரணமாக நாளுக்கு நாள் நோயின் பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நேற்று (27.04.2021) வரை 15,830 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று சென்னையில் ஒரே நாளில் 4,640 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,08,855 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில்,வருகிற வாரம் முதல் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் மூட வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, வார நாட்களிலே இறைச்சியை வாங்குவதற்கு மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேபோல் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க மக்கள் குவிந்தனர்.