Advertisment

தமிழக முதல்வராக முதல்முறையாக பொறுப்பேற்றுள்ள மு.க. ஸ்டாலின், பதவியேற்றதும் முதல் கையெழுத்தாக ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ஒன்றான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரண உதவித் தொகையாக 4,000 ரூபாய், இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, தமிழக அரசு அறிவித்த கரோனா உதவித் தொகை முதல் தவணையாக 2,000 ரூபாய் இன்று (15.05.2021) முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படுகிறது. தமிழக அரசு அறிவித்துள்ள கரோனா நிவாரண நிதி தொகையான 2,000 ரூபாயை வாங்குவதற்கு சிந்தாதிரிப்பேட்டை, புளியந்தோப்புரேஷன் கடையில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருந்தனர்.