Advertisment

தொடர் மழை: ஏரியில் மீன் பிடிக்கும் மக்கள்! (படங்கள்)

தமிழ்நாட்டில் கடந்த ஒருமாதமாக வடகிழக்கு பருவமழை பெய்துவருகிறது. நவம்பர் முதல் வாரத்தில் பெய்த மழை பாதிப்புகளில் இருந்தே மக்கள் இன்னும் முழுமையாக இயல்பு நிலைக்கு வரவில்லை. இந்நிலையில், தற்போதும் கடலோர மாவட்டங்கள் மற்றும் சென்னை உட்பட பல்வேறு இடங்களில் தொடர்ந்துமழை பெய்துவருகிறது.

Advertisment

அதனால் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதனால் அன்றாட பணிகளை செய்ய முடியாமல் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக கொரட்டூர் ஏரி நிறைந்து உபரி நீர் வெளியேறிவருகிறது. இதனால் ஏரியில் உள்ள மீன்களும் நீர் வெளியேற்றத்தின் காரணமாக அடித்துவருகிறது. இந்த மீன்களைப் பிடிக்க மாதனாங்குப்பம் பகுதி மக்கள் வலைவிரித்து பிடித்துவருகின்றனர்.

Advertisment

Chennai korattur people
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe