style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
வேலூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த வீராங்குப்பம் ஓம்சக்தி நகரில் வசிப்பவர் குணசேகரன். இவரது மனைவி விநோதினி 7 மாத கர்பிணியாக உள்ளார். இவருக்கு சில தினங்களுக்கு காய்ச்சல் வந்துள்ளது. தொடர் காய்ச்சலால் அவதிப்பட்ட வினோதனியை வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இரண்டு நாள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி இறந்தார். வினோதனி இறந்தபின்பே அவர் பன்றி காய்ச்சலால் உயிரிழந்தார் என குடும்பத்தார்க்கு தகவல் கூறியுள்ளனர்.
உயிரிழந்த வினோதனிக்கு 2 வயதேயான பிரன்னிஸ் என்கிற குழந்தை உள்ளது. தற்போது வீராங்குப்பத்தில் மருத்துவ குழு உள்ளது. இதேப்போல் அதே வேலூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த கூர்மாபாளையம் பகுதியை சேர்ந்த முனிசாமி என்பவருக்கு தொடர் காய்ச்சல் இருந்து வந்துள்ளது. டெங்கு காய்ச்சல் என தெரியவர ஆம்பூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அக்டோபர் 30 ந்தேதி இரவு 9 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆம்பூர் பகுதியை சேர்ந்த இருவர் பன்றிக்காய்ச்சல், டெங்கு காய்ச்சலால் இறந்தது அப்பகுதி மக்கள் மத்தயில்பயம் தொற்றியுள்ளது.