Advertisment

சாக்கடை தண்ணீரை குடிக்கும் மக்கள்!; ஓபிஎஸ்சின் சொந்தமாவட்டத்தில் இந்த நிலை

துணை முதல்வர் ஓபிஎஸ்சின்சொந்த மாவட்டமான தேனி நகராட்சியில் 33 வார்டு உள்ளது. இந்த வார்டுகளில் உள்ள பொதுமக்களும் நகராட்சி மூலம் குழாயில் வரக்கூடிய நல்ல தண்ணீரைதான் பிடித்து வைத்து குடித்துவருகிறார்கள்

Advertisment

இந்த நிலையில்தான் கடந்த ஆறுமாதங்களாகவே அல்லிநகரம் மற்றும் 29-வது வார்டு பகுதியில் உள்ள குப்பன் தெரு,ராகவன் காலணிபகுதிகளில் நகராட்சி மூலம் குழாயில் வரக்கூடிய நல்ல தண்ணீர் கலங்களாகவருவதை கண்டு அப்பகுதியில் உள்ள மக்கள் குழாய் தண்ணீரை பிடித்தாலும் கூட அதை கொதிக்க வைத்து குடித்து வந்தனர். அப்படி இருந்தும் கூட தண்ணீர் தொடர்ந்து கலங்கலாக வருவதால் வேறு வழியில்லாமல் வடி கட்டியும் அந்த கலங்களான தண்ணீரைதான் அப்பகுதி மக்கள் தொடர்ந்து குடித்து வருகிறார்கள்.

Advertisment

water

இது பற்றி அப்பகுதியை சேர்ந்த நாசர் கான்னிடம் கேட்ட போது.... எங்க பகுதிகளில் உள்ள பெரும்பாலான இடங்களில் சாக்கடை களை ஒட்டியே நகராட்சி மூலம் நல்ல தண்ணீர் குழாய்களும் பதித்து இருக்கிறார்கள் இப்படி பதிக்கப்பட்ட நல்ல தண்ணீர் குழாய் உடைந்ததின் மூலம் அவ்வழியாக செல்ல கூடிய சாக்கடை கழிவு நீரும் அந்த நல்ல தண்ணீரில் கலந்து கடந்த நான்கு மாதங்களாகே கழிவு நீராகதான் வருகிறது. அதை குடிக்க கூடிய நிலையில்மக்களும்இருந்து வருகிறார்கள் ஆனால் இப்பகுதியில் கொஞ்சம் வசதிபடைத்தவர்கள் கேன் தண்ணீரை வாங்கியும் குடித்து வருகிறார்கள்.

water

இதைப்பற்றி நகராட்சியில் பொருப்பு கமிஷனர் ராஜாராம் மற்றும் மேனேஜர் சரேஷ் ஆகியோரிடம் எங்க பகுதி மக்கள் சார்பில் பல முறை மனு கொடுத்தும் கூட எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை அதன் பின் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவ் விடமும் நான்கு முறை மனு கொடுத்தும் கூட கலெக்டரும் நல்ல தண்ணீரில் சாக்கடை கலப்பதை சரி செய்து நல்ல தண்ணீரை மக்களுக்கு கொடுக்க சொல்லி ஆர்வம் காட்டாமல் தொடர்ந்து மெத்தன போக்கையேகடைபிடித்து வருகிறார் என்பது தான் வேதனையாகஇருக்கிறது.எனவேஇனி கலெக்டர் உள்பட அதிகாரிகளை நம்பி பயனில்லைஇல்லை என்பதால் கூடிய விரவில் மக்கள் போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகிறார்கள். அதோடு துணை முதல்வர் ஓபிஎஸ்சிடமும்முறையிட இருக்கிறோம் என்று கூறினார். சொந்த மாவட்ட மக்களின்அடிப்படை வசதிகளை கூட ஓபிஎஸ் செய்து கொடுக்க ஆர்வம் காட்டாததால் அப்பகுதி மக்கள் தொடர்ந்து சாக்கடை தண்ணீரை குடித்து வருவதுதான் வேதனையாக இருக்கிறது.

Drainage ops ops_eps water
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe