Advertisment

'ஒரு எதிர்க்கட்சிக்கான குறைந்தபட்ச வெற்றியைக் கூட அதிமுகவிற்கு மக்கள் தரவில்லை' - மு.க. ஸ்டாலின்

People did not give the AIADMK even the slightest victory for an opposition' - MK Stalin

தமிழ்நாட்டில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று முன்தினம் (12/10/2021) காலை 08.00 மணிக்குத் தொடங்கிய நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.

Advertisment

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வெற்றிபெற்ற திமுக வேட்பாளர்கள், திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றுவருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிட்டு வென்ற வேட்பாளர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ''மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டியவர்கள் என்றுஎந்நாளும், எப்போதும் நெஞ்சில் வைத்துச் செயலாற்றுங்கள். மக்களின் குறைகள் நீக்கப்பட வேண்டுமேயன்றி நிர்வாகம் மீது குறைசொல்லக்கூடிய நிலை ஏற்பட்டு விடக்கூடாது. மக்கள் கிட்டத்தட்ட 100 சதவிகித வெற்றியை திமுகவிற்கு கொடுத்துள்ளார்கள். ஒரு எதிர்க்கட்சிக்கான குறைந்தபட்ச அளவு வெற்றியைக் கூட அதிமுகவிற்கு மக்கள் தர முன்வரவில்லை. எதிர்க்கட்சியே இல்லாத ஆளுங்கட்சி என்ற இறுமாப்பு கொள்ளும் மனப்பான்மை எனக்கு கிடையாது. மக்கள் பணியில் ஈடுபடும்போது நமது மனசாட்சியே நமது எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் உதித்தெழுந்த சூரியன், விரைவில் நடக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலிலும் உதித்திட வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.

Advertisment

admk local body indirect election stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe