Advertisment

தடுப்பூசி போட்டுக்கொள்ள அலைமோதிய பொதுமக்கள்!! 

the peoples crowded to get vaccinated

Advertisment

திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு 14,300தடுப்பூசிகள் நேற்று (11.06.2021) வந்தடைந்தன. இன்றுமுதல் திருச்சியில் உள்ள 18 முதல் 44 வயதுடைய நபர்களுக்கும்,45 வயதுக்கு மேல் உள்ள நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில்,திருச்சி மாநகராட்சி பகுதியில் 4 கோட்டங்களில் 18 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், ஊரக பகுதியில் கீழ்காணும் 14 மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இன்று காலை 10.00 மணிமுதல் தடுப்பூசி போடும் பணி துவங்கியது.

மாநகராட்சி பகுதிகள் - பொன்மலை, அரியமங்கலம், கோ-அபிசேகபுரம், ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகம் மற்றும் ஊரகப்பகுதிகள் - நவல்பட்டு, இனாம்குளத்தூர், குழுமணி, சிறுகாம்பூர், புதூர்உத்தமனூர், வளநாடு, புத்தாநத்தம், புள்ளம்பாடி, வையம்பட்டி, தண்டலைப்புத்தூர், மேட்டுப்பாளையம், வீரமச்சான்பட்டி, காட்டுப்புத்தூர், உப்பிலியபுரம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலைய மையங்களிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுவருகிறது.

ஒருவார காலத்திற்குப்பிறகு தற்போது தடுப்பூசி போடும் பணி தொடங்கியதால் 4 கோட்டங்களிலும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து, தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

coronavirus vaccine trichy
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe