Advertisment

கரோனா பரவும் வகையில் நெரிசலில் நின்று மருந்து வாங்க குவிந்த மக்கள்..! (படங்கள்)

பல தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்து இருப்பு இல்லாததால், வெளியில் இருந்து மருந்தை வாங்கிவரும்படி உறவினர்களிடம் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டை வைத்துக்கொண்டு, ரெம்டெசிவிர் மருந்துக்காக மக்கள் கடை கடையாக அலைகின்றனர். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில் வைத்துக் கொடுக்கப்பட்டிருந்த ரெம்டெசிவிர் மருந்து, தற்போது கூட்டம் கூடுவதைக் கருத்தில்கொண்டு, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் வைத்துக் கொடுக்கப்பட்டுவருகிறது.அதனால், அதனை வாங்குவதற்காக சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கம் அருகில், கரோனா தொற்று பரவல் அச்சமில்லாமல் அசாதாரணமாகவும், தனிமனித இடைவெளியைக் காற்றில் பறக்கவிட்டவாறு மருந்தை வாங்க மக்கள் கூடியுள்ளனர்.

Advertisment

Remdesivir people gathered Stadium Chennai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe