பொங்கல் விடுமுறையை ஒட்டி சென்னை மெரினா கடற்கரை மற்றும் தீவு திடல், வண்டலூர் பூங்கா ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

Advertisment

பொங்கல் விடுமுறை காரணமாக சென்னை பெருநகர் மற்றும் புறநகர் பொதுமக்கள் மற்றும் பல மாவட்டங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் சென்னை மெரினா கடற்கரையில் குவிந்தனர். இதன் காரணமாக மெரினாவின் உழைப்பாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரை மக்கள் கூட்டம் அலைமோதியது. அதேபோல் சென்னை தீவு திடலிலும் பொதுமக்கள் அதிகப்படியாக குவிந்தனர். அதேபோல் வண்டலூர் பூங்காவிலும் அதிகப்படியான பொதுமக்கள், சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்காலிகமாக 20 சிறப்பு கவுன்டர்கள் திறக்கப்பட்டது.

Advertisment