






தமிழகத்தில் தேர்தல் முடிந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி முதல் தளர்வுகளுடன் கூடிய உரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பேருந்துகளில் 50% இருக்கைகள் பயன்படுத்தவும், நின்றபடி பயணம் செய்ய அனுமதி இல்லை எனவும், பேருந்து நடத்துனர் அதை அனுமதிக்கக் கூடாது எனவும் அரசு அறிவித்துள்ளது. ஆனால், சென்னையில் பல பேருந்துகள் கூட்ட நெரிசலுடன்தான் செல்கிறது. அரசு விதித்த உத்தரவை மீறி பேருந்துகளில் பயணிகள் நின்றபடி பயணம் செய்கின்றனர். கூட்ட நெரிசலை தவிர்க்க பேருந்துகளை அதிகப்படுத்தியதாக அரசு தரப்பில் அறிவித்துள்ளனர். இருந்தபோதிலும் பேருந்துகளில் கூட்டம் குறைந்ததாக தெரியவில்லை. சென்னை கோயம்பேட்டிலிருந்து பாரிமுனை, திருவெற்றியூர் செல்லும் வழித்தடங்களில் பெரும்பாலான பேருந்துகளில் பயணிகள் நின்றபடிதான் பயணம் செய்கின்றனர். மேலும், முகக் கவசம் இல்லாமலும், கரோனா தொற்று பயம் இல்லாமலும் பொதுமக்கள் சாலைகளில் நடந்து செல்கின்றனர்.