Advertisment

'அரசின் வழிகாட்டுதல்களை சென்னை மக்கள் பின்பற்றவில்லை!' -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

'The people of Chennai did not follow the guidance of the government' - Chief Minister Edappadi Palanisamy

Advertisment

சென்னை மாநகராட்சியில் கரோனாதடுப்பு ஆய்வுகூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில்,

உலகையேஆட்டிப்படைக்கும் கரோனவை தடுப்பது சவாலான விஷயமாக உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களின்சிறப்பான பணியால்56% பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில்கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனைகளை அதிகரிக்கும்போது தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயேகரோனாவிலிருந்து அதிகம் குணமடைந்தவர்கள் தமிழகத்தில்தான்.அரசின் வழிகாட்டுதல்களைசென்னை மக்கள் பின்பற்றவில்லை.அரசின் வழிகாட்டுதலை சென்னை மக்கள் பின்பற்றி இருந்தால் கரோனாவை கட்டுப்படுத்தி இருக்கலாம். சென்னையில் 526 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 32 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வளர்ந்த நாடுகளில்அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றியதால்கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.

Advertisment

ஜூன் மாதமும் மக்களுக்கு விலையில்லாரேஷன்பொருட்கள் வழங்கப்படும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் சென்னைதான் அரசுக்கு சவாலாக உள்ளது. ராயபுரத்திலுள்ள134 தெருக்களில் நோய் பரவல் அதிகமாக இருப்பதற்குமக்கள் நெருக்கமாக இருப்பதேகாரணம். சென்னைக்குள் வருவோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்என்றார்.

Tamilnadu Chennai edappadi pazhaniswamy corona virus
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe