Skip to main content

'அரசின் வழிகாட்டுதல்களை சென்னை மக்கள் பின்பற்றவில்லை!' -முதல்வர் எடப்பாடி பழனிசாமி

Published on 02/06/2020 | Edited on 02/06/2020
'The people of Chennai did not follow the guidance of the government' - Chief Minister Edappadi Palanisamy

 

சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றுகையில்,

உலகையே ஆட்டிப்படைக்கும் கரோனவை தடுப்பது சவாலான விஷயமாக உள்ளது. மருத்துவர்கள், செவிலியர்களின் சிறப்பான பணியால் 56% பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகத்தில் அதிக பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. பரிசோதனைகளை அதிகரிக்கும்போது தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தொற்று பரவாமல் தடுப்பதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவிலேயே கரோனாவிலிருந்து அதிகம் குணமடைந்தவர்கள் தமிழகத்தில்தான். அரசின் வழிகாட்டுதல்களை சென்னை மக்கள் பின்பற்றவில்லை. அரசின் வழிகாட்டுதலை சென்னை மக்கள் பின்பற்றி இருந்தால் கரோனாவை கட்டுப்படுத்தி இருக்கலாம். சென்னையில் 526 சிறப்பு மருத்துவ முகாம்கள் மூலம் 32 ஆயிரம் பேர் பயனடைந்துள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்லும் மக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வளர்ந்த நாடுகளில் அரசின் விதிமுறைகளை சரியாக பின்பற்றியதால் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது.


ஜூன் மாதமும் மக்களுக்கு விலையில்லா ரேஷன் பொருட்கள் வழங்கப்படும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் சென்னைதான் அரசுக்கு சவாலாக உள்ளது. ராயபுரத்திலுள்ள 134 தெருக்களில் நோய் பரவல் அதிகமாக இருப்பதற்கு மக்கள் நெருக்கமாக இருப்பதே காரணம். சென்னைக்குள் வருவோர் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர் என்றார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Next Story

தேர்தல் விடுமுறை; சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
election holiday; Operation of special buses

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்களுக்கு தேர்தலை முன்னிட்டு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் மொத்தம் மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு தேர்தல் விடுமுறைக்காக செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை, தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு படையெடுக்கும் மக்கள், முன்பதிவு இல்லாத ரயில் பெட்டியில் அதிகப்படியாக பயணம் செய்து வருகின்றனர். சில ரயில்களில் ஆபத்தான வகையில் தொங்கியபடி பயணம் செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் சென்னையில் இருந்து மற்ற மாவட்டங்களுக்கு செல்வோருக்காக சுமார் 2,899 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தற்பொழுது வரை ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.