Advertisment

முதல்வராகும் மு.க.ஸ்டாலின்... கொண்டாட்டத்தில் பொதுமக்கள்!

People celebrating the inauguration of MK Stalin as Chief Minister

Advertisment

திமுக கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றியம் சி.கொத்தங்குடி ஊராட்சியில், ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பதவி ஏற்பதையொட்டி, ஊராட்சியில் பொறுப்புக் குழு உறுப்பினர் சுப்பு என்கிற வெங்கடேசன் தலைமையில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் கூட்டணிக் கட்சியைச் சார்ந்த காங்கிரஸ் தங்க கஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின்நகரச் செயலாளர் ஆதிமூலம் மற்றும் கழகத்தின் இளைஞரணியைச் சேர்ந்த ஒன்றியத் துணை அமைப்பாளர் திருமாறன், கழகச் செயலாளர் பாண்டியன் பிரான்சிஸ் குட்டி என்கிற முருகானந்தம், பிரதிநிதி நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்குஇனிப்பு வழங்கப்பட்டது.

stalin Cuddalore
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe