தமிழக காவல்துறை சார்பாக "TAMIL NADU POLICE CITIZEN SERVICES" என்ற மொபைல் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தமிழக மக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் குற்றங்கள் நடந்தால் அவைகளை இந்த செயலி மூலம் முழு விவரங்களை பதிவிட்டால் உடனடியாக FIR பதிவு செய்து விடலாம். மேலும் தனது முதல் தகவல் நிலையை இந்த செயலியில் (FIR STATUS , CSR STATUS ) அறிந்து கொள்ளலாம். ஒவ்வொரு இளைஞர்களும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து பொதுமக்களுக்கு உதவ வேண்டும் என்பதை கேட்டுக்கொள்கிறேன்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/WhatsApp Image 2019-03-12 at 7.21.45 AM.jpeg)
குற்றவாளிகளை உடனே கண்டறிய இந்த செயலி பயனுள்ளதாக மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இந்த முதல் தகவல் அறிக்கையில் கொள்ளை நடந்தாலோ , வாகன திருட்டு, அதிக வட்டி வசூலித்தல் , சட்டவிரோத செயல் போன்ற சம்பவங்கள் எவையேனும் நடந்தேறினால் இந்த செயலியை பயன்படுத்தி உடனடியாக முதல் தகவல் அறிக்கையை மக்களே பதிவு செய்யலாம். தமிழக காவல்துறை சார்பாக இத்தகைய செயலி மக்களுக்கு மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
பி . சந்தோஷ் , சேலம் .
Follow Us