Advertisment

பரிதாபமாக உயிரிழந்த குரங்கு; மனிதனைப் போல் அடக்கம் செய்த மக்கள்

People buried  a monkey who passed away

Advertisment

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளதுமின்னூர். இந்தப் பகுதியில் உள்ளசென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் ஆண் குரங்கு ஒன்று சாலையைக் கடக்க முயன்ற போது சென்னையில் இருந்து பெங்களூர் நோக்கி அதி வேகமாக சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் குரங்கு பரிதாபமாக உயிரிழந்தது.

இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் உயிரிழந்த குரங்கிற்கு மனிதர்களைப் போல பூக்களால் அலங்கரித்துபூஜை செய்து வழிபட்டு பின்னர் பாடை கட்டி தூக்கிச் சென்று அடக்கம் செய்தனர். இதனைத் தொடர்ந்து வரும் ஒன்பதாம் நாள் காரிய நிகழ்ச்சி நடத்துவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆறறிவு படைத்த சில மனிதர்களுக்கு உதவ முன்வராத மக்கள் மத்தியில் வாய் பேச முடியாத குரங்கின் மறைவிற்கு மனிதர்களைப் போல அலங்கரித்துபூஜை செய்து அடக்கம் செய்த அப்பகுதி மக்களை சமூக ஆர்வலர்கள் மற்றும் வன ஆர்வலர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

Monkey
இதையும் படியுங்கள்
Subscribe