People blocked the road in Kulithalai to condemn the police

Advertisment

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூரைச் சேர்ந்தவர் விவசாய கூலித்தொழிலாளிஆறுமுகம்(70). இவர் நேற்று மாலை மேட்டுமருதூரில் இருந்து பணிக்கம்பட்டிக்குச் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த டிப்பருடன் கூடியடிராக்டர் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.உடலைக் கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்விற்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், இன்று முதியவரின்உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வு செய்ய இருந்த நிலையில், அங்கு வந்த போலீசார் அடையாளம் தெரியாத வாகனம் என வழக்குப் பதிவு செய்திருந்ததால், ஆத்திரமடைந்த உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் போலீசாரைக் கண்டித்து திருச்சி - கரூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்துமறியலைக் கைவிட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.