
புதுச்சேரி அருகே உள்ள தமிழக பகுதியான சின்ன முதலியார் சாவடியில் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற மூர்த்தி என்பவர் ராட்சத அலையில் சிக்கி அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில் நீண்ட நாட்கள் கோரிக்கையான தூண்டில் வளைவு அமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் பல கட்டப் போராட்டங்கள் நடத்தி வந்தனர். தொடர் விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுவதால் அங்கு உடனடியாக தூண்டில் வளைவு அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி நேற்று அப்பகுதி கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் இறந்தவரின் சடலத்தைச் சாலையில் வைத்து புதுச்சேரி - சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வட்டாட்சியர், அவர்களை சமாதானம் செய்தனர் பின்பு அவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரைச் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Follow Us