Skip to main content

மேயர் வீட்டை முற்றுகையிட்ட பொதுமக்கள்

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
people besieged the house of Chennai Mayor Priya Rajan

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதன் காரணமாகச் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் தேசிய மற்றும் மாநிலப் பேரிடர் மீட்புக் குழுவினர், காவல்துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகளைச் சார்ந்த மீட்புக் குழுவினர் இப்பணிகளில் பெருமளவில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். படகுகள் மற்றும் வாகனங்கள் மூலமாக நீர் சூழ்ந்த பகுதிகளிலிருந்து பொதுமக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு வருகின்றனர். மேலும் அவர்களுக்குத் தேவையான உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதனிடையே சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் தொடர்பாக சிலர் தமிழக அரசை விமர்சித்து வருகின்றனர். மேலும் வடசென்னை உள்ளிட்ட பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்துள்ளதோடு, மின்சாரம் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வருவதாகவும் சமூக வலைத்தளங்களில் பல பதிவுகள் வெளியாகி வருகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து மூன்று நாட்களாக மின்சாரம் மற்றும் குடிநீர் இல்லை என்று கூறி சென்னை மேயர் பிரியா ராஜன் இல்லத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். சென்னை பெரம்பூர் திருவிக நகர் தொகுதிக்குட்பட்ட கிருஷ்ணன் தாஸ் சாலையில் மேயர் பிரியா ராஜன் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் 71 வது வார்டு கிருஷ்ணன் தாஸ் சாலை, திருவள்ளுவர் தெரு, மங்களபுரம் உள்ளிட்ட பகுதி மக்கள் சேர்ந்து மேயர் பிரியா ராஜனின் வீட்டை முற்றுகையிட்டுள்ளனர். தொடர்ந்து மூன்று நாளாக மின்சாரம், குடிநீர் இல்லை, வெள்ளம் வெளியேறாமல் கழிவுநீர் சூழ்ந்திருக்கிறது என்ற பல கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் செய்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மேலும், தண்ணீரை வெளியேற்றுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால் தான் மின்சாரம் தடைசெய்யப்பட்டிருகிறது. இன்று மாலைக்குள் மின்சாரம் வர ஏற்பாடு செய்திருக்கிறேன். உங்கள் அனைவருக்கும் மின்சாரம், பால் உள்ளிட்டவைகள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்திருக்கிறேன் என்றார். அப்போது ஒரு பெண்மணி, “நாங்கள் இன்னும் சாகலமா, நீங்க  பால் ஊத்துவதற்கு..” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னை மேயர் பிரியா சென்ற கார் விபத்தில் சிக்கியது!

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
Chennai mayor Priya's car was involved in an accident

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தனது காரில் பயணித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த மேயரின் காரின் முன்னால் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. இந்த கார் திடீரென திரும்பியதால் பின்னால் வந்து கொண்டிருந்த மேயரின் கார் மோதியது. அதே சமயம் மேயரின் காருக்கு பின்னால் வந்த லாரி ஒன்று மேயரின் காரின் மீது மோதியது.

இந்த கார் விபத்தில் மேயர் பிரியா நல்வாய்ப்பாக காயமின்றி தப்பினார். மேயரின் ஓட்டுநருக்கு மட்டும் லேசான உள்காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் மேயர் காரின் முன் மற்றும் பின்பகுதிகள் பலத்த சேதம் அடைந்துள்ளன. விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சென்னை மேயர் பிரியாவின் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

சென்னை மாநகராட்சி பட்ஜெட் இன்று தாக்கல்

Published on 21/02/2024 | Edited on 21/02/2024
Chennai Corporation budget tabled today

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டப்பேரவையில் தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று முன்தினம்(19.02.2024) காலை 10 மணியளவில் தாக்கல் செய்தார். அதன்படி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு புதிய திட்டங்களை அறிவித்தார். 

இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையில் நேற்று (20-02-24) 2024 - 2025ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டை தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று (21-02-24) தாக்கல் செய்யப்படவுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் 2023 - 2024ஆம் ஆண்டுக்கான விரிவான பட்ஜெட்டை மேயர் பிரியா தாக்கல் செய்தார். அந்த பட்ஜெட்டில், ‘மக்களை தேடி மேயர்’ உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், சென்னை மாநகராட்சியின் 2024 - 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கூட்டரங்கில் இன்று (21-02-24) காலை 10 மணிக்கு மேயர் பிரியா தாக்கல் செய்கிறார். 

இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில், பள்ளி, கல்வி, விளையாட்டு, திறன் மேம்பாடு உள்ளிட்ட பணிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனிடையே, இன்று தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் மீதான விவாதம் நாளை (22-02-24) நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.