Advertisment

''ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தும் செயல்பாடுகளை மக்கள் கேலிக்கூத்தாகப் பார்க்கின்றனர்''- ஜி.கே. வாசன் பேட்டி

publive-image

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு த.மா.க நிர்வாகி செந்தில்வேலன் மகன்கள் இருவர் மறைவையொட்டி அவரது இல்லத்திற்கு ஆறுதல் கூறுவதற்குத்தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வத்தலக்குண்டு வருகை தந்தார். இந்நிகழ்வின்போது த.மா.க மாநில, மாவட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Advertisment

அதன்பின் செய்தியாளர்களிடம் ஜி.கே.வாசன் பேசுகையில், ''வடகிழக்குப் பருவமழை தொடங்கி டெல்டா பகுதிகளில் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழிந்துள்ளது. இதனால் விவசாயிகளின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விளை நிலங்களை உடனடியாக கணக்கீடு செய்து தாமதம் செய்யாமல் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கத்தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்று கடலுக்குச் சென்ற 19 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படையினர் அத்துமீறி கைது செய்துள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை நடவடிக்கை எடுத்து தமிழக மீனவர்களை மீட்க வேண்டும். தமிழக ஆளுநரைத்திரும்பப் பெற வலியுறுத்தும் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் செயல்பாடுகளைத்தமிழக மக்கள் ஒரு கேலிக்கூத்தாகப் பார்க்கின்றனர்'' என்று கூறினார்.

Advertisment

tmc
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe