இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகை உற்சாகமாகக்கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் பாரம்பரிய வழிபாடு மற்றும் கலாச்சார முறைகளில் தீபாவளி கொண்டாட்டம் களைக்கட்டுகிறது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் புத்தாடை அணிந்து, பட்டாசு வெடித்து தீபாவளியைக் கொண்டாடுகின்றனர். மேலும் மக்கள் காலையிலேயே வழிபாட்டுத்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருகின்றனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர்கள், மாநில முதல்வர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.