Published on 25/11/2021 | Edited on 25/11/2021

சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் இன்று (25/11/2021) நடைபெற்ற நிகழ்ச்சியில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சமூகப் பாதுகாப்பு திட்டங்களின் கீழ் புதிதாக 1,01,474 பயனாளிகளுக்கு மாதாந்திர ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக, 10 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப., கூடுதல் தலைமைச் செயலாளர் / வருவாய் நிர்வாக ஆணையர் க. பணீந்திர ரெட்டி இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் குமார் ஜெயந்த் இ.ஆ.ப., சமூக பாதுகாப்புத் திட்ட ஆணையர் என். வெங்கடாசலம் இ.ஆ.ப. ஆகியோர் கலந்துகொண்டனர்.