Pennagaram

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கோடி அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கோடாரம்பட்டியைச் சேர்ந்த 15 வயது சிறுவன், அதே ஊரில் உள்ள அரசுப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

Advertisment

பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த அந்த சிறுவன், ஜூலை 15ம் தேதி, அப்பகுதியில் ஒரு புதர் மறைவில் மலம் கழித்துள்ளார். அதைப் பார்த்த உள்ளூரைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர், சிறுவனை சாதி பெயரைச் சொல்லியும், ஆபாச வார்த்தைகளாலும் திட்டியுள்ளார். ஆத்திரத்தில் சிறுவனை தாக்கியதாகவும் சொல்லப்படுகிறது.

மேலும், சிறுவனின் கையாலேயே மலத்தை அள்ளிச்சென்று, வேறிடத்தில் அப்புறப்படுத்த கொட்டச் செய்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து சிறுவனின் பெற்றோர், மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியினர் பென்னாகரம் காவல்துறை டிஎஸ்பி மேகலாவிடம் புகார் அளித்தனர்.

இதற்கிடையே, மாணவனின் பெற்றோர் தன்னை தாக்கியதாக ராஜசேகரும் பென்னாகரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். டிஎஸ்பி உத்தரவின்பேரில், பென்னாகரம் காவல் ஆய்வாளர் பெரியார் இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.