நிலுவையில் வழக்கு... தாடியுடன் ஓபிஎஸ்!

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

அண்மையில் பிரதமர் மோடி, 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டுமக்கள் அனைவரும் அவரவர்களது இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்திருந்தார். அதன்படி பல இடங்களில் பொதுமக்கள் வீடுகளில் தேசியக் கொடியைஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். அதேபோல் சினிமா பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும் தங்களது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செய்தனர்.

அதன்படிஅதிமுகவின் ஓபிஎஸ் அவரது இல்லத்தின் மாடியில் தேசியக் கொடியை ஏற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். அதிமுகவில் ஒற்றைத் தலைமையை தொடர்பான விவகாரம் வெடித்து பூதாகரமாகியுள்ள நிலையில், அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் எப்பொழுதும் க்ளீன்ஷேவில்இருக்கும்ஓபிஎஸ்இன்று கொடி ஏற்றிய பொழுதுமுகத்தில் தாடியுடன் காணப்பட்டார்.

அதேபோல் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது கட்சியினர் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர். ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் தீபக் ஆகியோர்ஜெ.இல்லத்தில்தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினர்.

admk independence day.
இதையும் படியுங்கள்
Subscribe