Penalty for doctors who do not renew registration: ordered to Central and state governments respond in case against Council registrar order

Advertisment

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் மருத்துவர்கள் பதிவு செய்துள்ளனர். இவர்களின் பதிவை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், புதுப்பிக்கவும்100 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும்,பிப்ரவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பிக்கத் தவறினால்,10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் எனவும்கடந்த ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி கவுன்சில் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த உத்தரவை எதிர்த்து, கவுன்சிலின் முன்னாள் தலைவர் பி.பாலகிருஷ்ணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். கரோனா காலத்தில் உயிரையும் துச்சமென நினைத்து சேவையாற்றும் மருத்துவர்களை இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் அபராதம் விதிக்கப்படுவதாகவும், தற்போதைய தலைவர் செந்தில் தலைமையிலான நிர்வாகிகள், மருத்துவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல்,நிதியைப் பெருக்குவதிலேயே குறியாக இருப்பதாகவும்குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்சி.கனகராஜ் ஆஜராகி, மருத்துவர்களின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் பிறப்பிக்கப்பட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

Advertisment

இவ்வழக்கு குறித்து மத்திய - மாநில சுகாதாரத் துறை, தேசிய மருத்துவ ஆணையம்,தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் ஆகியவை,3 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.