Skip to main content

நெசவாளர்களின் கழுத்தை இறுக்கும் நூல் விலை... கொதிக்கும் நெசவுத் தொழிலாளர்கள்!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Peak yarn prices; Strike ... Peak yarn prices; Strike ...

 

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவின் தாலுகாவில் விவசாயத்திற்கு அடுத்த பிரதான தொழில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி. நேர்முகம், மறைமுகம் என்று சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமே 6,000க்கும் மேற்பட்ட விசைத்தறிகள்தான். இந்தத் தொழிலுக்கு அரசு உதவி அவ்வளவாக கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது.
 

கரோனா தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மீண்டு வருகின்ற நேரத்தில், நூல் விலை அதிகரித்துள்ளது நெசவாளர்களுக்கு பேரிடியாக விழுந்துள்ளது. நைஸ் ரக நூலின் விலை கட்டு ஒன்றுக்கு ரூ.395 என்ற அளவு உயர்ந்துள்ளதால், நெசவுத் தொழில்கள் முடங்கியுள்ளது. இதனால், போராட்டம், அரசின் கவன ஈர்ப்பு என்றாகியிருக்கிறது சங்கரன்கோவில் நிலை. இது, சங்கரன்கோவிலுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் ஜவுளி உற்பத்தித் திறனின் மீது ஏற்பட்ட பெரும் சுமை என்கிறார்கள் விசைத்தறி நெசவுத் தொழிலாளர்கள்.

 

Peak yarn prices; Strike ... Peak yarn prices; Strike ...


இன்று அறிவித்தபடி நகரின் அனைத்து விசைத்தறிக் கூடங்களும் நிறுத்தப்பட்டு தொழிலாளர்கள், ஜவுளி உற்பத்தியாளர்கள், தி.மு.க.வின் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம், சி.பி.எம்.மின் சி.ஐ.டி.யு., ஐ.என்.டி.யு.சி., பாரதிய மஸ்தூர் சங்கம் என்று அனைத்துக் கட்சிகளும் இணைந்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரான சுப்பிரமணியன், “தமிழகத்தில் விவசாயத்திற்கு அடுத்தபடியான சுயசார்பு தொழில் விசைத்தறி நெசவு ஜவுளி உற்பத்தி. சிமெண்ட் விலை உயருகிற போதெல்லாம் அரசு உடனே தலையிட்டு எவ்வாறு விலையைக் கட்டுப்படுத்துகிறதோ, விவசாய விளைபொருளுக்கான அடிப்படை ஆதார விலையை அரசு நிர்ணயிக்கிறதோ, அதே போன்று நெசவுத் தொழிலின் மூலப் பொருளான நூல் விலையையும் கட்டுப்படுத்தி அரசு நிர்ணயம் செய்ய வேண்டும். அப்போதுதான் நெசவுத் தொழில் மற்றும் நெசவாளர்கள் பாதுகாப்பு வரம்பிற்குள் கொண்டு வரப்படும்” என்று பேசினார்.

 

தொடர்ந்து பேசிய மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேசன் தலைவர் உள்ளிட்ட பலரும் இதனையே வலியுறுத்தியதுடன் மத்திய மாநில அரசுகள் தலையிட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நூல் விலை குறைந்ததால் பின்னலாடை தொழில்துறையினர் மகிழ்ச்சி! 

Published on 01/10/2022 | Edited on 01/10/2022

 

 

The knitwear industry is happy because the price of yarn has come down!


அக்டோபர் மாதத்திற்கான நூல் விலை கிலோவுக்கு ரூபாய் 40 குறைக்கப்பட்டிருப்பதால், பின்னலாடைத் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

திருப்பூரில் 2,000- க்கும் மேற்பட்ட பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் அதனை சார்ந்த துணை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மாதந்தோறும் நூல் விலையில் ஏற்றம், இறக்கம் இருப்பதால், ஆடைகளின் விலையை நிர்ணயம் செய்வதில் இழப்பைச் சந்தித்து வருவதாக பின்னலாடை நிறுவனங்கள் கூறி வந்தன. 

 

அதே நேரத்தில், நூல் விலையைக் குறைக்கக் கோரி, கடந்த சில மாதங்களாக போராட்டங்களிலும் ஈடுபட்டு வந்தன. இந்த நிலையில், வரும் அக்டோபர் மாதத்திற்கான நூல் விலையை நூற்பாலைகள் வெளியிட்டுள்ளன. அதன்படி, நூல் விலை கிலோவுக்கு 40 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. 

 

நான்கு மாதங்களில் நூல் விலை கிலோவிற்கு 110 ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதால், பின்னலாடைத் தொழில் துறையினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

 

Next Story

நூல் விலை உயர்வால் முடங்கிய விசைத்தறி உற்பத்தி! -அருப்புக்கோட்டையிலும் வேலை நிறுத்தப் போராட்டம்!

Published on 27/05/2022 | Edited on 27/05/2022

 

 Power loom production paralyzed by rising yarn prices! -Strike in Aruppukottai too!

 

ஜவுளி உற்பத்தி நகரமாக விளங்கும் அருப்புக்கோட்டையில், நூல் விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, சிறு குறு மற்றும் நடுத்தர விசைத்தறி நிறுவனங்கள்,  தங்களது ஜவுளி உற்பத்தியை நிறுத்திவைத்து, இன்று (27-ஆம் தேதி) முதல் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். நூல் விலை உயர்வு தொடர்ந்து, சேலைகள் விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் அடைந்தது தான், போராடும் நிலைக்குத் விசைத்தறி நிறுவனங்களைத் தள்ளியிருக்கிறது.

 

கைத்தறித் தொழிலில் போதிய வருமானம் கிடைக்காமல் நலிவுற்றதாலேயே, கைத்தறி நெசவாளர்கள் விசைத்தறிக்கு மாறினார்கள். அருப்புக்கோட்டையில் சுமார் 8 ஆயிரம் விசைத்தறிகள் இயங்கி வருவது, சுமார் 25 ஆயிரம் தொழிலாளர்களின் வாழ்வாதாரமாக உள்ளது. இங்கு உற்பத்தி செய்யப்படும் சேலைகளின் விலை மலிவு என்பதால், பல மாநில வியாபாரிகளும் கொள்முதல் செய்து வருகின்றனர். தற்போது நூல் விலை ஒவ்வொரு மாதமும் தாறுமாறாக ஏற, நூல் வாங்க முடியாத நிலையில், உற்பத்தி செய்த சேலைகளின் அடக்கவிலையும் கூடியதால், விற்பனையாகாமல் கடும் நெருக்கடியைச் சந்தித்துள்ளனர்.  

 

ஜவுளி உற்பத்தியை அதிகரிக்கவும், நெசவாளர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கவும், விசைத்தறி நெசவாளர்கள் தமிழக அரசிடம் முன்வைக்கும் கோரிக்கை என்னவென்றால், விசைத்தறி நல வாரியம் அமைப்பது, நெசவாளர்களுக்கு என்று நூல் வங்கி அமைத்து, மானிய விலையில் நூல்களை வழங்குவது, விசைத்தறிகள் அமைத்திட மானியத்துடன் கடன் வழங்குவது, விசைத்தறி நெசவாளர் குடும்பங்களுக்கு தனி மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தைச் செயல்படுத்துவது, விசைத்தறி பயிற்சி மையம் அமைப்பது  எனப் பட்டியல் நீள்கிறது.

 

பருத்திக்கு விதித்த இறக்குமதி வரியை திரும்பப் பெறுவதாக ஒன்றிய அரசு அறிவித்தும் நிலைமை சீராகாமல், பருத்தி நூல் விலை தொடர்ந்து உயர்ந்தபடியே இருக்கிறது.  அருப்புக்கோட்டையில் மட்டுமல்ல, ஈரோடு, சேலம், பள்ளிப்பாளையம், ராஜபாளையம் போன்ற ஊர்களிலும் வேலைநிறுத்தத்தில் நெசவாளர்கள் ஈடுபட்டுள்ளதால், பல்லாயிரம் பேர் வேலை வாய்ப்பினை இழக்க நேரிட்டுள்ளது. அதனால், இந்த விவகாரத்தில் பிரதமரே தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்பதே, விசைத்தறி நெசவாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.