
சேத்தியாத்தோப்பு அருகே வீராணம் ஏரிக்கரையில் உயிரிழந்து கிடந்த மயில் வனத்துறையினர் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ஒரத்தூர் கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வாழக்கொல்லை கிராமத்துக்கு அருகே வீராணம் ஏரிக்கரை பகுதியில் நேற்று மயில் ஒன்று உயிரிழந்து கிடந்தது. இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் இது குறித்து சிதம்பரம் வனத்துறை அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறை அதிகாரிகள் உயிரிழந்து கிடந்த மயிலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். பின்னர் பிரேதப் பரிசோதனைக்காக ஒரத்தூரில் உள்ள அரசு கால்நடை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று(ஜூலை.9) காலை பிரேதப் பரிசோதனை முடிந்தவுடன் மயிலை பாதுகாப்பாக எடுத்து சென்று புதைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Follow Us