ஜெ.வின் மூன்றாம் ஆண்டு நினைவுநாள்... இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அமைதிப் பேரணி! 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படவிருக்கின்ற நிலையில்முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் கருப்புச்சட்டை அணிந்தபடிஜெயலலிதாவின் நினைவிடம் நோக்கி அமைதிப்பேரணி நடைபெற்றது. இதற்காக சென்னையில் போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் ஓபிஎஸ், இபிஎஸ், அமைச்சர்கள், அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டு நினைவிடம் நோக்கி நடந்து சென்றனர். பாதுகாப்பிற்காக போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்த பேரணியில் ஜெ. மற்றும் எம்ஜிஆர் நினைவிடம் சென்றமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் ஜெ.நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதன்பின் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.

admk jayalalitha ops_eps
இதையும் படியுங்கள்
Subscribe