ப.சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பியதை கண்டித்து காங்., ஆர்ப்பாட்டம்

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை திஹார் சிறைக்கு அனுப்பியதை கண்டித்து, சென்னையில் காங். தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

c

மூத்த தலைவர் குமரி அனந்தன், ஊடக பிரிவு தலைவர் கோபண்ணா, திருவள்ளூர் எம்.பி.ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ செல்வ பெருந்தகை உள்ளிட்ட காங்கிரசார் இதில் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது பேசிய எம்.பி.ஜெயக்குமார், "மத்திய அரசு அரசியல் காழ்புணர்ச்சியுடன் நடந்து கொள்கிறது. பொருளாதாரம் அதலபாதாளத்தில் சென்று கொண்டிருக்கிறது. அதில் இருந்து மக்களை திசை திருப்பவே ப.சிதம்பரத்தை மத்திய அரசு கைது செய்திருக்கிறது. விரைவில் அவர் விடுதலை செய்யப்படவில்லை என்றால், எங்களது போராட்டம் தொடரும்" என்றார்.

P chidambaram
இதையும் படியுங்கள்
Subscribe