காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்தின் 75 -ஆவது பிறந்தநாள், காங்கிரஸ் தொண்டர்களால் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.

Advertisment

அதன் ஒரு பகுதியாக, இன்று காலை காங்கிரஸின் தமிழக தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் கரோனா முன்களப் பணியாளர்களுக்குச் சிறப்பு செய்யும் விதமாக அவர்களோடு கேக் வெட்டி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினார்கள். இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கு.செல்வப்பெருந்தகை தலைமை தாங்கினார்.