ADVERTISEMENT

"சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்"- ப.சிதம்பரத்திற்கு வைரமுத்து புகழாரம்!

01:25 PM Dec 08, 2019 | Anonymous (not verified)

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தை கடந்த அக்டோபர் 16ஆம் தேதி அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்தது. டெல்லி திகார் சிறையில் இருந்த ப.சிதம்பரம் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதி மன்றத்தி்ல் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை டெல்லி உயர்நீதி மன்றம் நிராகரித்து விட, உச்ச நீதி மன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார் சிதம்பரம்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த மேல்முறையீட்டு மனுவை டிசம்பர் 4ஆம் தேதி விசாரித்த நீதிபதிகள் ஆா்.பானுமதி, ஏ.எஸ்.போபண்ணா, ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அமர்வு ப.சிதம்பரத்திற்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து டெல்லி திகார் சிறையில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வந்ததை அவரது ஆதரவாளர்களும் கட்சித்தொண்டர்களும் கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில் ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் பாடலாசிரியர் வைரமுத்து நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார். பின்னர் வைரமுத்து, தனது டிவிட்டர் பக்கத்தில்," இன்று காலை ப.சிதம்பரத்தை அவரது இல்லத்தில் சந்தித்தேன். மீண்டும் அவர் பழைய முகம் பார்த்தேன்;சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்" என்று பதிவிட்டுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT