பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்கும் வகையிலான குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார்.
இந்நிலையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த ப.சிதம்பரம், "மத்திய குடியுரிமை சட்டத்திற்கு பதில், அகதிகள் சட்டத்தை கொண்டு வந்திருக்க வேண்டும். நாட்டை பிளவு படுத்துவதற்காகவே மத்திய அரசு இந்திய குடியுரிமை சட்டத்தை கொண்டுவந்துள்ளது" என்று தெரிவித்தார்.