ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோயிலின் குடமுழுக்குவருகிற 27ம் தேதி மிகச்சிறப்பாக நடைபெற இருக்கிறது. இந்த குடமுழுக்கைமுன்னிட்டு இறுதிக்கட்ட பணிகளும் அசுர வேகத்தில் நடந்து வருகிறது. அதேபோல் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு,உணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் கடந்தசில தினங்களுக்கு முன்பு பழனி திருக்கோயிலுக்குச் சென்று குடமுழுக்குப்பணிகளை ஆய்வு செய்தனர்.
அதைத் தொடர்ந்துஉணவு மற்றும் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் குடமுழுக்கு ஆலோசனைக் கூட்டம் நேற்றுநடைபெற்றது. இதில் தென் மண்டல ஐ.ஜி,திண்டுக்கல் தேனி மாவட்ட சரகடிஐஜிஎஸ்.பி பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர்விசாகன் உள்ளிட்ட அதிகாரிகள் பெரும்பாலானோர் கலந்துகொண்டனர். அதன்பின் பத்திரிகையாளர்களிடம் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, “வருகிற 27 ஆம் தேதி நடைபெறும் குடமுழுக்கை முன்னிட்டு பழனி நகர பேருந்துகளில் பொது மக்கள் எந்த ஒரு கட்டணமும் இல்லாமல் இலவசமாக பயணம் செய்யலாம். அதுபோல் குடமுழுக்கில் கலந்து கொள்ள குலுக்கல் முறையில்2000 பக்தர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதுபோல் குடிநீர், கழிப்பறை போன்ற வசதிகளை பக்தர்களுக்கு செய்து கொடுப்பதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது” என்றார்.