Advertisment

சம்பளத்தை உடனே வழங்கு, நீதிமன்ற உத்தரவுபடி வேலை கொடு... -நரிமணத்தில் தொழிலாளர்கள் முழக்கம்

 Pay the salary immediately; Work as court orders - Workers slogan

Advertisment

நாகை அருகே செயல்பட்டு வரும் மத்திய பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூன்று மாதமாக சம்பளம் வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதை கண்டித்தும், நிரந்தர வேலை வழங்காமல் அலட்சியம் காட்டி வருவதை கண்டித்தும் தொழிலாளர்கள் நிறுவன வாயிலில் முழக்கமிட்டனர்.

நாகை மாவட்டம், நாகூர் அடுத்துள்ள நரிமணம், கடலங்குடி பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனம் தொடங்கியபோது சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தவர்களின் விளைநிலங்களைபெற்றபோது, அவர்களின் வீட்டில் ஒருவருக்கு நிறுவனத்தில் நிரந்தர வேலை வழங்குவதாக உறுதி அளித்தே நிலத்தை கையகப்படுத்தினர். 2007 -ம் ஆண்டு முதல் இதுநாள் வரை வெறும் 9 நபர்களுக்கு மட்டுமே வேலை கொடுத்துள்ளனர். 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வந்தாலும், அவர்களுக்குநிரந்தரமான வேலை வழங்கப்படவில்லை.

தொழிலாளர்களுக்கு உடனடியாக நிரந்தர வேலை வழங்கவேண்டும் என திருச்சி தொழிலாளர் நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் உத்தரவு வழங்கியுள்ளது. ஆனால் இவர்கள் நீதிமன்றத்தின் உத்தரவையும் மதிக்கவில்லை, நிலம் கையகப்படுத்தும்போது கொடுத்த உத்தரவாதத்தையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றனர் எனநிறுவனம் மீது தொழிலாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisment

“கரோனோ காலத்தில் குடும்பம் நடத்தவே முடியாமல் தவிக்கிறோம், ஆனால் கடந்த மூன்று மாதங்களாகவே நிறுவனம் சம்பளம் கொடுக்கவில்லை, உடனடியாக தமிழக அரசு தலையிட்டு நிரந்தர வேலை மற்றும்ஊதியம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்கிறார்கள் தொழிலாளர்கள்.

indian oil protest nagai
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe