/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/26_20.jpg)
வருகின்ற 2021 சட்டமன்றத் தேர்தலுக்காக 'சீரமைப்போம் தமிழகத்தை' என்ற தலைப்பில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது முதல்கட்ட பிரச்சாரத்தை மதுரை மற்றும் நெல்லை மண்டலங்களில் சில நாட்களுக்கு முன்பு நிறைவு செய்தார். இரண்டாம் கட்ட பிரச்சாரமாக தற்போது சென்னை புறநகர்ப் பகுதிகளில் பரப்புரை செய்து வருகிறார்.
இதற்காக ஒவ்வொரு இடங்களுக்கும் சென்று பரப்புரை செய்து வருகிறார். ஆளும் மற்றும் திமுக கட்சிகளை அவர் சகட்டு மேனிக்கு விமர்சனம் செய்தும் வருகிறார். இதனிடையே ட்விட்டரிலும் பரப்புரைக்கு இடையிடையே கருத்து தெரிவித்து வருகிறார். இந்நிலையில் இன்று பரப்புரையின் போது பேசிய கமல், "தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)