Advertisment

"உங்கள் ஆட்சி இந்தியாவுக்கே முன்னுதாரணம்" - மு.க ஸ்டாலினை புகழ்ந்த பவன் கல்யாண்!

Advertisment

Advertisment

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை பாராட்டி நடிகரும், ஜனசேனா தலைவருமான பவன் கல்யாண் ட்விட் செய்துள்ளார். அதில், " அன்புக்குரிய தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். எந்த ஒரு அரசியல் கட்சி ஆனாலும் ஆட்சிக்கு வர வேண்டும் என்றால் அரசியல் செய்ய வேண்டும். ஆனால், ஒரு கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அரசியல் செய்யக் கூடாது.

அதை வார்த்தைகளால் அல்ல, செயல்களால் நீங்கள் செய்து வருகிறீர்கள். உங்கள் ஆட்சி நிர்வாகம், உங்கள் அரசின் செயல்பாடுகள், உங்கள் மாநிலத்திற்கு மட்டுமல்ல, நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் ஊக்கமளிக்கும் விதத்தில் இருக்கிறது. உங்களுக்கு மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்" என தெரிவித்துள்ளார்.

pawan kalyan stalin
இதையும் படியுங்கள்
Subscribe