Advertisment

பாவலரேறு மகள் தேன்மொழி இயற்கை எய்தினார்...

Pavalare's daughter thenmozhi passed away

Advertisment

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருப்புதல்வியும் சொல்லாய்வாளர் ப.அருளியின் துணைவியாருமான தேன்மொழிஅம்மையார், இன்று (14.9.2020) அதிகாலை 4 மணியளவில் இயற்கை எய்தினார். அண்மை நாட்களாக உடல்நலப் பாதிப்போடு போராடிக்கொண்டிருந்தவர், தமது புதுவை இல்லத்திலேயே மரணமடைந்தார்.

தந்தை வழியில் இன உணர்வோடும் மொழி உணர்வோடும் இயங்கிவந்தவர் தேன்மொழி. இலக்கிய இதழ் ஆசிரியராகவும் சிறப்புற செயல்பட்டவர். பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று தனித்தமிழுக்கு நலம் சேர்த்தவர். சிறந்த எழுத்தாளர். அவருடைய மறைவு இலக்கிய அன்பர்களையும் பாவலரேறு பற்றாளர்களையும் கலங்க வைத்திருக்கிறது. தனது இறுதி நாள் வரையில் முகநூல் வழியாகவும் இன உணர்வுப் பதிவுகளை வெளியிட்டு வந்தவர் தேன்மொழி என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மலை 4 மணியளவில் அவரது இறுதி நிகழ்வுகள் நிகழ இருக்கின்றன.

முகவரி: 06.காளிக்கோயில் தெரு, தமிழூர் (திலாசுப் பேட்டை) புதுச்சேரி.

Tamil language
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe