Skip to main content

'புதிய அரசு வெற்றியடைய வாழ்த்துக்கள்'-தமிழக முதல்வர் ட்வீட்!

Published on 16/03/2022 | Edited on 16/03/2022

 

'Congratulations on the success of the new government' - Tamil Nadu Chief Minister tweeted!

 

அண்மையில் நடந்து முடிந்த உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், கோவா ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிப் படுதோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக, பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சியிடம் ஆட்சியை இழந்தது. மற்ற நான்கு மாநிலங்களில் பா.ஜ.க.வெற்றிபெற்றது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவந்த் மான் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராக இன்று பொறுப்பேற்க இருக்கிறார். பல தரப்பில் இருந்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'பஞ்சாப் முதல்வராக இன்று பதவியேற்க இருக்கும் பகவந்த் மானுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். தமிழ்நாடு மற்றும் பஞ்சாப் ஆகியவை இந்திய யூனியனில் மொழிவாரி உரிமைகள் மற்றும் மாநில உரிமைகள் பற்றி குரல் கொடுத்த நீண்ட வரலாற்றைப் பகிர்ந்து கொள்கின்றன. பஞ்சாபில் புதிய அரசாங்கம் வெற்றியடைய வாழ்த்துக்கள்' எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கர்ப்பிணி மனைவியை கொடூரமாக கொலை செய்த பகீர் சம்பவம்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Incident happened on his pregnant wife in punjab

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் அருகே உள்ள புல்லேநங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் சுக்தேவ். இவர், பிங்கி (23) என்ற பெண்ணை திருமணம் செய்து அவருடன் வசித்து வந்தார். 6 மாத கர்ப்பமாக இருந்த பிங்கியின் வயிற்றில், இரட்டை குழந்தைகள் வளர்ந்து வந்திருந்தது.

இதற்கிடையில், சில தினங்களாகவே, சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகம் இவர்கள் இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல், சுக்தேவுக்கும், பிங்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் தகராறாக மாறியுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சுக்தேவ், கர்ப்பிணி பெண் என்றும் பாராமல் மனைவி பிங்கியை கட்டிலோடு சேர்த்து கட்டி வைத்து தீ வைத்துள்ளார். இதில், கர்ப்பிணி பெண்ணான பிங்கியின் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனை தொடர்ந்து, சுக்தேவ் சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த பிங்கியை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கர்ப்பிணி மனைவியை தீ வைத்து தப்பியோடிய சுக்தேவை பிடித்து கைது செய்த போலீசார், தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து தேசிய மகளிர் ஆணையம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Next Story

செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Greetings from CM MK Stalin to chess player Gukesh

கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி கனடாவில் நடைபெற்றது. இதில் சாம்பியனுக்கான இறுதி போட்டியின் கடைசி சுற்றில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் குகேஷ் (வயது 17) அமெரிக்காவின் நகமுராவை எதிர்கொண்டார். இந்த ஆட்டத்தில் இருவரும் 1/2 புள்ளிகள் பெற்றனர். இதன் மூலம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியின் முடிவில் 9 புள்ளிகள் பெற்று குகேஷ் சாம்பியன் பட்டம் வென்றார். நகமுரா 8.5 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தார்.

இந்த தொடரை வென்றதன் மூலம் உலக செஸ் சாம்பியன் ஷிப் செஸ் போட்டியில் சீனாவில் டிங் லிரெனை எதிர்கொள்ள குகேஷ் தகுதி பெற்றுள்ளார். மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. 

Greetings from CM MK Stalin to chess player Gukesh

இந்நிலையில் செஸ் வீரர் குகேஷுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அபாரமான சாதனை படைத்த குகேஷுக்கு வாழ்த்துகள். 17 வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் செஸ் தொடரை வென்ற இளம் வீரர் என்ற வரலாற்றை படைத்துள்ளார். உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்திற்காக சீனாவின் டிங் லிரனுக்கு எதிரான போட்டியிலும் குகேஷ் வெல்ல வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.