Skip to main content

திருக்கை மீனில் உயிர் காக்கும் மருத்துவ மூலக்கூறுகள்; அண்ணாமலை பல்கலை. ஆராய்ச்சிக்கு ஜெர்மனியில் காப்புரிமை

Published on 13/06/2023 | Edited on 13/06/2023

 

pattern right for thirukkai fish medical assistance molecules annamalai university

 

கடல் வாழ் உயிரினங்கள் உணவாக மட்டும் இல்லாது உயிர் காக்கும் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. அந்த வகையில் கடல் வாழ் உயிரினமான திருக்கை மீனில் இருந்து முக்கிய மருத்துவ மூலக்கூறுகளைப் பிரித்து எடுத்துச் சாதனை புரிந்துள்ளார் அண்ணாமலை பல்கலைக்கழக கடல் அறிவியல் புல பேராசிரியர் ஆறுமுகம் மற்றும் அவருடைய ஆராய்ச்சிக் குழுவினர்.

 

பொதுவாகத் திருக்கை (திருக்கார்) மீன்கள் விஷமுடைய நீண்ட முட்களைக் கொண்டுள்ளது. அம்மீன்களில் உள்ள முட்களை நீக்கி விட்டு உணவுக்காக அதனைப் பயன்படுத்துகிறார்கள். இந்த முட்களிலிருந்து மருந்து பொருட்கள் எடுத்து இரத்தம் உறைதலை தடுக்கவும், கேன்சர் செல்களை அழிக்கும் மருந்தாகவோ பயன்படுத்த முடியும். மேலும் இதன் மூலக்கூறுகளில் இருந்து ஆற்றல் மிக்க வலி நிவாரணி உருவாக்க முடியும்.

 

இது சம்பந்தமாக உலகளாவிய அளவில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் குறிப்பிட்ட ஆராய்ச்சிக்கு மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை பேராசிரியர் எம்.ஆறுமுகம் தலைமையிலான குழுவினருக்கு ரூ. 2.75 கோடி நிதி வழங்கி உதவியதன் பெயரில் இச்சாதனையை புரிந்திருக்கின்றனர். இதனையடுத்து பேராசிரியர் எம்.ஆறுமுகம், ஆராய்ச்சி மாணவி எஸ்.உத்ரா உள்ளிட்ட ஆராய்ச்சிக் குழுவினர்களை அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.எம்.கதிரேசன், பதிவாளர் பேராசிரியர் சிங்காரவேல், கடல் அறிவியல் புல முதல்வர் மற்றும் இயக்குநர் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

 

pattern right for thirukkai fish medical assistance molecules annamalai university

 

இதுகுறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்ட பேராசிரியர் ஆறுமுகம் கூறுகையில், "கடந்த 2022 ஆண்டு முதல் அண்ணாமலை பல்கலைக்கழக கடல்வாழ் உயராய்வு மையம் கடல் வளம் மற்றும் உயிரினங்களில் மருந்துப் பொருட்கள் தயாரிப்பது குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அப்போது திருக்கை மீனில் உள்ள முட்களை அதிக அளவில் நீக்கிப் போட்டுள்ளதை எடுத்துப் பதப்படுத்தி ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது இது போன்ற மருத்துவ குணங்கள் உள்ளது எனத் தெரியவந்தது. பின்னர் ஆராய்ச்சியின் முடிவுகளை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஜெர்மனி நாட்டில் காப்புரிமை பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையில் ஆராய்ச்சி முடிகளைப் பரிசீலனை செய்து காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது என்றும் இது அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம்; கலாச்சேத்ரா முன்னாள் பேராசியருக்கு காப்பு

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Kalachetra former teacher arrested on complaint

அண்மையில் கலாச்சேத்ரா கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக மாணவிகள் போராட்டம் நடத்திய நிலையில் புகார் தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டு இருந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் அதே கலாச்சேத்ரா கல்லூரியில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியராக பணியாற்றிய நடன ஆசிரியர் தற்பொழுது பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கலாச்சேத்ராவில் பணியாற்றிய பேராசிரியர் ஸ்ரீஜித் என்பவர் பணியில் இருந்த போது பாலியல் தொல்லை கொடுத்ததாக சமீபத்தில் வெளிநாட்டில் இருந்து ஒரு புகார் சென்னை காவல் துறைக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அந்தப் புகாரின் அடிப்படையில் சென்னை காவல்துறை விசாரணை மேற்கொண்டது. இதில் புகார் கொடுத்த பெண்ணிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது அதனடிப்படையில் 15 வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவத்தை வைத்து நடன பேராசிரியர் ஸ்ரீஜித்தை போலீசார் கைது செய்துள்ளனர்.

Next Story

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பாலியல் சமத்துவ பயிற்சி பட்டறை

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
Gender Equality Workshop at Annamalai University

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு நிறுவனம் இணைந்து பாலியல் சமத்துவத்தைப் பற்றிய 3 நாட்கள் பயிற்சி பட்டறை பல்கலைக்கழக மக்களியல் துறையில் நடைபெற்றது. மக்களியல் துறை உதவிப் பேராசிரியர் க. மகேஸ்வரி அனைவரையும் வரவேற்றார். கலைப்புல தலைவர் விஜயராணி தலைமை தாங்கிப் பேசினார். துறைத் தலைவர் ரவிசங்கர் பயிற்சி பட்டறை பற்றிய தொகுப்பு உரையாற்றினார்.

சிறப்பு விருந்தினராக அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆளவை மன்ற உறுப்பினர் பேராசிரியர் அரங்க பாரி, ராஜீவ்காந்தி தேசிய மேம்பாட்டு நிறுவனத்தின் பேராசிரியர் வசந்தி ராஜேந்திரன், சிதம்பரம் வட்டாட்சியர் ஹேமா ஆனந்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ - மாணவிகளுக்குப் பாலியல் சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இதில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவ - மாணவியர்கள் மற்றும் அதன் உறுப்பு கல்லூரி மாணவ - மாணவியர்கள் 100 பேர் கலந்து கொண்டனர். மக்களியல் துறை இணைப் பேராசிரியர் பீமலதா தேவி நன்றியுரை வழங்கினார்.