Patrol vehicle parked in the middle of the road ... Motorists suffer!

ரோந்து வாகனத்தைக் காவலர்கள் நடு சாலையிலேயே விட்டு சென்றதால் சென்னை அசோக் நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Advertisment

சென்னை அசோக் நகர் 11 ஆவது அவென்யூ சாலையில் குமரன் நகர் காவல்நிலைய ரோந்து வாகனம் ஒன்று விபத்துக்குள்ளாகி நடு சாலையில் பழுதாகி நின்றது. காவலர்கள் அந்த வாகனத்தை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டு சென்ற நிலையில் தற்பொழுது அந்த சாலையில் வாகன போக்குவரத்து ஏற்பட்டுள்ளது. கேட்பாரற்று நிற்கும் அந்த ரோந்து வாகனத்தில் வாக்கி டாக்கிகள் சத்தம் ஒலித்துக் கொண்டிருந்தது. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.இதுகுறித்து அங்குள்ள போக்குவரத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் ரோந்து வாகனத்தை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.