patient from the Madurai Government Hospital with rotting feet has was expelled

கால்கள் அழுகிய நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நபரை மருத்துவமனை ஊழியர் ஒருவர் சிகிச்சை அளிக்க முடியாது என கூறி பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையிலிருந்து வெளியேற்றிய அவலம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது.

Advertisment

மதுரையில் அடையாள தெரியாத ஒருவர் கடுமையான உடல்நிலை பாதிப்புடன் கால்கள் அழுகிய நிலையில் சாலையோரம் இருந்துள்ளார். அந்த வழியாக சென்ற சமூக ஆர்வலர் ஒருவர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு பாதிக்கப்பட்ட நபரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளார்.

Advertisment

இதையடுத்து பாதிக்கப்பட்ட நபருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்படும் என நினைத்த போது, அவர் மருத்துவமனையில் அனுமதித்த சில மணி நேரங்களிலேயே மருத்துவமனை ஊழியர் ஒருவர் பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் இருந்து வெளியேற்றி பிணவறைக்கு அருகே உள்ள சாலையோரத்தில் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு சிகிச்சை அளிக்காமல் அவரை அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேற்றிய செயல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.