Advertisment

‘கொரோனில்’ என்ற பெயரைப் பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட தடை உத்தரவு ரத்து!

patanjali company coronil word chennai high court order

கரோனா வைரஸ்மருந்துக்கு 'கொரோனில்' என்ற பெயரைப் பயன்படுத்த,பதஞ்சலி நிறுவனத்துக்குத் தடை விதித்த உத்தரவை ரத்து செய்து, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisment

கரோனா வைரசுக்கான மருந்துக்கு 'கொரோனில்' என்ற பெயரைப் பயன்படுத்த,பதஞ்சலி நிறுவனத்துக்குத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும், பதஞ்சலி நிறுவனத்துக்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டிருந்தது.

Advertisment

patanjali company coronil word chennai high court order

'கொரோனில்' என்ற பெயரில் இயந்திரங்களைத் தூய்மைப்படுத்தும் ரசாயனக் கலவையைத் தயாரிக்கும் நிறுவனத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவை எதிர்த்து, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனம் மற்றும் திவ்யா யோக் மந்திர் அறக்கட்டளை சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் சரவணன் அடங்கிய அமர்வு, ‘இயந்திரங்களைத் தூய்மைப்படுத்தும் ரசாயனக் கலவையைத் தயாரிக்கும் நிறுவனம், 'கொரோனில்' என்ற பெயரைப் பதிவு செய்யவில்லை. 'கொரோனில்' பெயருடன் சேர்த்து, 92 பி மற்றும் 213 எஸ்.பி.எல். என எண்கள் மற்றும் ஆங்கில எழுத்துகளைச் சேர்த்துப்பதிவு செய்துள்ளது. அதனால், 'கொரோனில்' என்ற வார்த்தைக்கு ஏகபோக உரிமை கோர முடியாது’ எனக் கூறி, கொரோனில் பெயரைப் பயன்படுத்த பதஞ்சலி நிறுவனத்துக்குத் தடை விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

order chennai high court Patanjali
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe