நான்கு மாதங்களாகியும் தாங்கள் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை என முதல்வரின் தனிப்பிரிவில் பொதுமக்கள் சிலர் இன்று புகாரளிக்க வந்தனர்.

Advertisment

அந்த புகார் மனுவில் 'கடந்த நான்கு மாதங்களாக ஆகியும் நாங்கள் கொடுத்த புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான 12 கோடி ரூபாய் மதிப்புடைய இடத்தை அபகரித்து கொட்டகை சர்ச் அமைத்து ஏமாற்றி வரும் பாஸ்டர் ஜான் வெங்கடேசனிடம் இருந்து நிலத்தை மீட்டுத்தர வேண்டும் என மன்றாடி கேட்டுக்கொள்கிறோம்' என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த புகார் மனுவை மண்டியிட்டபடியே அவர்கள் முதல்வரின் தனிப்பிரிவில் கொடுத்துவிட்டுச் சென்றனர்.